மும்பையில் இன்று 2,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பையில் இன்று 2,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-11 16:27 GMT
மும்பை,

மும்பை மாநகராட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 2,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,29,450 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு இன்று 42 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மும்பையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,430 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,709 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் தற்போது 22,919 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 1,93,805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்