பீகார் சட்டசபைதேர்தல்: நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா,ராகுல்,மன்மோகன்சிங் பெயர்
பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லி,
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28 தொடங்கி நவம்பர் 7 வரை 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி போட்டியிடுகிறது.
மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவைப்படுகிறது. நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனாத தளம், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகள் ஆகும்.
இந்நிலையில் பீகார்சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 30 பேர் அடங்கிய பட்டியலில், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட், பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல், குலாம் நபி ஆசாத், தாரிக் அன்வர் உள்ளிடோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
3 கட்டங்களாக நடைபெறவுள்ள வாக்குப்பதிவில், ராகுல்காந்தி தலா 2 பொதுக் கூட்டங்கள் என மொத்தம் 6 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.