கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகிறார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகிறார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு.;
புதுடெல்லி,
இந்தியாவில் பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.
இதுகுறித்து துணை குடியரசு தலைவர் அலுவலக டுவிட்டர் பதிவில், ‘தொற்று உறுதியானதில் இருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மருத்துவர்களின் அறிவுரையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் தற்போது நலமாக உள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பதிவில், ‘நலம் பெற வேண்டி எனக்கு கடிதங்கள் அனுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எனது நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.