ஹத்ராஸில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் மீது மை வீசியதால் பரபரப்பு
ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து, கொல்லப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது பெண்ணின் உறவினர்களை சந்திக்க சென்ற ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் மீது மை வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து, கொல்லப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் விதமாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், பிரமுகர்களும் ஹத்ராஸ் சென்று வருகின்றனர். அந்த வகையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக ஹத்ராஸுக்கு நேரில் சென்று இருந்தார்.
பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற குர்தா மீது மையை வீசி விட்டு அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதனையடுத்து எம்.பி சஞ்சய் சிங் உடனடியாக காரில் ஏறி அந்த இடத்தை விட்டு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.