கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேசுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சுங்கத்துறையின் வழக்கில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Update: 2020-10-05 11:58 GMT
கொச்சி, 

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருந்ததால், பல முக்கிய பிரமுகர்களிடம் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.

இந்நிலையில் கேரள தங்கக் கடத்தல் தொடர்பான சுங்கத்துறையின் வழக்கில் ஸ்வப்னாவுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 60 நாட்கள் கடந்தும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், என்ஐஏ வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வருவதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார். இந்த வழக்கில் மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

மேலும் செய்திகள்