மிசோரமில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
மிசோரமில் கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
ஐஸ்வால்,
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் புதிததாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் இதுவரை 2,120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 1,807 பேர் குணமடைந்த நிலையில் 313 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் அங்கு கொரோன பாதிப்பால் இதுவரை யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.