இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,829 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆயிரத்து 829 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தொற்று பரவல் இன்னும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 75,829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 940 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டி, 65 லட்சத்து 49 ஆயிரத்து 374 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 37 ஆயிரத்து 625 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 55 லட்சத்து 09 ஆயிரத்து 967 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,01,782 ஆக உயந்ந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.