மத்திய பிரதேசத்தில் இன்று 1,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய பிரதேசத்தில் இன்று 1,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-03 17:59 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய பிரதேசத்தில் இன்று 1,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,33,918 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் இன்று 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,101 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 1,11,712 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 19,807 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்