மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது - பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-03 12:25 GMT
கோவா,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்ளுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தை கொண்டுசெல்லவும் ராகுல்காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் மட்டுமே போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் எவ்வித எதிர்ப்பும் எழவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு விவசாயிக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்