ஐதராபாத்தில் கட்டிடத்தில் இருந்து குதித்து ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை

ஐதராபாத்தில் கட்டிடத்தில் இருந்து குதித்து ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-10-02 00:20 GMT
ஐதராபாத்,

ஆந்திர மாநில வனத்துறையில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ரமணா மூர்த்தி (வயது59). இவர் ஐதராபாத் நகோலே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென அந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்