செப்டம்பர் மாதத்தில் ரூ.95,480 கோடி ஜி.எஸ்.டி. வசூல்; கடந்த ஆண்டை விட அதிகம்
செப்டம்பர் மாதத்தில் ரூ.95,480 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த செப்டம்பர் மாதம் வசூலான மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.95 ஆயிரத்து 480 கோடி ஆகும்.
இது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான (ரூ.91 ஆயிரத்து 916 கோடி) தொகையை விட 4 சதவீதம் அதிகம். இத்தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.