கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள் திருடிய இருவர் கைது
கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.;
திருப்பதி
திருப்பதியில் கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கடந்த 23ம் தேதி ஸ்விம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டன.
இது தொடர்பான விசாரணையில், அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியரும்,செவிலியரும் நகைகளை திருடியது சிசிடிவி உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நான்கு தங்க மோதிரங்கள் மற்றும் 6000 ரூபாயையும் கைப்பற்றியதாக திருப்பதி எஸ் பி ரமேஷ் ரெட்டி தெரிவித்தார்.