சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய, மாநில அரசுக்கு உரிமை இல்லை சுப்ரீம் கோர்ட்டு கருத்து

ஜார்கண்ட் மாநிலத்தில், வர்த்தகரீதியாக நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு நிலக்கரி படுகைகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது.

Update: 2020-09-30 20:23 GMT
புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தில், வர்த்தகரீதியாக நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு நிலக்கரி படுகைகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-

மேலேழுந்தவாரியாக பார்த்தால், நிலக்கரி படுகைகளை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தோன்றும். ஆனால், அந்த பகுதி, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததா என்று கண்டறிய வேண்டும். அதற்காக நாங்கள் நிபுணர் குழுவை அனுப்பி வைப்போம். அது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தால், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்குமே நிலக்கரி வெட்டி எடுக்க உரிமை இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்