அசாம் மாநிலத்தில் இதுவரை 4,568 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் - அசாம் கூடுதல் டிஜிபி ஜி.பி. சிங் தகவல்
அசாம் மாநிலத்தில் இதுவரை 4,568 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில கூடுதல் டிஜிபி ஜி.பி. சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
அசாம்,
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இதுவரை 4,568 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில கூடுதல் டிஜிபி ஜி.பி. சிங் தகவல் தெரிவித்துள்ளார். இதில் 4,367 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 3,549 மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் போலீசார் 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 201 காவலர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.