எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே மக்களவையில் தொழிலாளர் மசோதாக்கள் நிறைவேற்றம்
மத்திய அரசு, தொழிலாளர் நலன் சார்ந்த 3 மசோதாக்களை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்துள்ளது.;
புதுடெல்லி,
மத்திய அரசு, தொழிலாளர் நலன் சார்ந்த 3 மசோதாக்களை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்துள்ளது. அந்தவகையில் ‘பணி பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிபந்தனைகள் குறியீடு 2020’, ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’, ‘சமூக பாதுகாப்பு குறியீடு 2020’ ஆகிய இந்த 3 மசோதாக்களும் கடந்த சனிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்கள் மீதான விவாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த 3 மசோதாக்களும் நிறைவேறின. ஆனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவையை நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருந்தன. அந்த சூழலிலும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மசோதா மீதான விவாதங்களுக்கு பதிலளித்து தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் பேசும்போது, ‘மக்களவை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளை சந்தித்துள்ளது. ஏனெனில் இந்த 3 மசோதாக்களும் நாட்டின் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு ஊதிய பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் சரியான பணிச்சூழலை வழங்கும். இந்த நடவடிக்கைகளின் மூலம் தொழிலாளர் சீர்திருத்தங்களை நாங்கள் தொடங்கி உள்ளோம்’ என்று கூறினார்.