திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 3-வது நாள்: முத்துப்பந்தல் அலங்காரத்தில் மலையப்பசாமி
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான இன்று இரவு 9 மணிக்கு மலையப்பசாமி முத்து பந்தல் அலங்காரத்தில், காளிங்கன் எனும் பாம்பின் மீது நடனமாடும் அலங்காரத்தில் தேவியர் சமேதரராய் எழுந்தருளினார்.
திருமலை,
திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. 27ஆம்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின்போது ஏழுமலையானின் சேனாதிபதி யான விஸ்வகேசவர் நான்கு மாட வீதிகளில் பவனி வந்துபிரம்மோற்சவ ஏற்பாடுகளைமேற்பார்வையிடுவார் என்பது ஐதீகம்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வீதி உலா இன்றி, கோவிலுக்குள் மட்டுமே வாகன சேவை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடத்தப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே முதன் முறையாகும்.
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 3-வது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். மாலையில் அவருக்கு ஸ்நப்ன திருமஞ்சனம் நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு மலையப்பசாமி முத்து பந்தல் அலங்காரத்தில், காளிங்கன் எனும் பாம்பின் மீது நடனமாடும் அலங்காரத்தில் தேவியர் சமேதரராய் எழுந்தருளினார்.
இரவு முத்துபந்தல் அலங்கராத்தில் வந்தருளினார். முழுக்க முழுக்க முத்துக்களால் பந்தல் அலங்கரிக்கப்பட்டு இருந்துது. பந்தலினுள் இருந்த சுவாமியின் ஆபரணங்கள் கூட முத்துக்களால் அமைந்திருந்தது. அலங்கார பிரியரான வேங்கடேஸ்வர பெருமாளை முத்துக்களால் அலங்கரித்தனர்.
நான்காம் நாளான நாளை காலை கேட்டவர்க்கு கேட்ட வரம் வழங்கும் கற்பகவிருட்ச அலங்காரத்திலும், இரவில் சர்வபூபாள வாகனத்தில் இரவும் எழுந்தருளுவார்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது. ஏழுமலையான் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கொடி கம்பம், பலிபீடம் அனைத்தும் வெளி நாட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன.
இம்முறை பிரம்மோற்சவ விழாவில், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற 12,000 பக்தர்கள் மட்டுமே திருப்பதியிலிருந்து திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.