மிசோரம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.
அய்ஸ்வால்,
மிசோரம் மாநிலத்தின் சம்பாய் அருகே இன்று காலை 7.29 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.