பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு வரும் 21ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
பீகாரில் வருகிற 21ந்தேதி 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே அடிக்கல் நாட்டுகிறார்.;
புதுடெல்லி,
பீகாரில் முதல் மந்திரி நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து உள்ளது. வருகிற அக்டோபரில் பீகாரில் சட்டசபை தேர்தலையும் சந்திக்க இருக்கிறது.
இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பீகாரில் வருகிற 21ந்தேதி 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே அடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோன்று பீகாரில் 45,945 கிராமங்கள் இன்டர்நெட் வசதி பெறும் வகையிலான கர்தக் என்ற கண்ணாடி இழை வழியே இன்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தினையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.