அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

மாநில அரசுகளின் பரிந்துரைகளை கேட்காமல் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2020-09-18 11:26 GMT
புதுடெல்லி,

மாநிலங்களவையில் இன்று ஹோமியோபதி மத்திய மருத்துவ கவுன்சில் திருத்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் மீது உரையாற்றிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, இந்த விவகாரத்தில் மாநில அரசுகளில் குரல் கேட்கப்படுவதில்லை என்று தெரிவித்தார். பன்முகத் தன்மையும் கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்து கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். 

இதற்குப் பிறகாவது மாநில அரசுகளின் பரிந்துரையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து ஹோமியோபதி மத்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

மேலும் செய்திகள்