ஆக்ராவில் உள்ள 'முகலாய' அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயர்-உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்ராவில் உள்ள 'முகலாய' அருங்காட்சியகத்திற்கு மராட்டிய வீரர் சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டினார்.

Update: 2020-09-15 01:18 GMT
புதுடெல்லி: 

ஆக்ராவில் உள்ள 'முகலாய' அருங்காட்சியகத்திற்கு மராட்டிய போர்வீரர் சிவாஜியின் பெயரை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சூட்டினார். மேலும் அவர் கூறும்போது.

இந்தியர்களுக்கு 'முகலாயர்களை ஒரு சிறந்தவர்களாக பார்க்க முடியாது' எனவே, சிவாஜி போன்ற இந்திய வீரர்கள் மக்களிடையே தேசியவாதத்தையும் தேசபக்தியையும் வளர்க்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.

"அடிமைத்தனத்தின் மனநிலையின் அடையாளங்களைத் தவிர, தேசத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முகலாயர்கள் எங்கள் முன்மாதிரியாக இருக்க முடியாது. தேசியவாதத்தின் கருத்துக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சத்ரபதி சிவாஜி மகாராஜ் எங்கள் ஹீரோ எனகூறினார்.

ஆக்ரா முகலாய அருங்காட்சியகத்தின் கட்டுமானம் 2016 இல் தொடங்கியது. 5.9 ஏக்கர் நிலப்பரப்பில் நடை பெற்று வரும் இந்த திட்டம் 2017 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கட்டுமானப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.இந்த பணியை மாநில சுற்றுலாத் துறை செய்து வருகிறது.

தாஜ்மஹாலின் கிழக்கு வாசலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருஙாட்சியக  திட்டபணிகளை முதல்வர் ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார். 

'முகலாய' அருங்காட்சியகத்திற்கு மராட்டிய போர்வீரர் சிவாஜியின் பெயரை யோகி ஆதித்யநாத்துக்கு மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்