வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Update: 2020-09-14 22:15 GMT
புதுடெல்லி,

அனைத்து வகை வெங்காயங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.  எனினும், வெங்காயங்களை வெட்டி, துண்டுகளாக்கி அல்லது பொடி வடிவில் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் ரூ.35 முதல் ரூ.40 வரை வெங்காய விலை உயர்ந்து இருந்தது.  அதனால், உள்ளூரில் வெங்காய வினியோகம் அதிகரிக்க செய்வதற்கும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூர் ரோஸ் வெங்காயங்கள் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காயங்கள் ஆகியவற்றுக்கும் இந்த தடை பொருந்தும்.  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என அரசு அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்