இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது கடவுளின் செயலா? - ராகுல் காந்தி கேள்வி

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது கடவுளின் செயலா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2020-09-12 03:27 GMT
புதுடெல்லி,

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய-சீன எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்று காரணமாக சரிவடைந்து உள்ளதாகவும், இதற்கு கடவுளின் செயலே காரணம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அந்த நிலத்தை எப்போது திரும்பப் பெற இந்திய அரசு திட்டமிட்டுள்ளது? அல்லது இதுவும் கடவுள் செயல் என விட்டுவிடப் போகிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தை விமர்சனம் செய்யும் வகையில் ராகுல் காந்தி இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்