மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நான்கு மணி நேரத்திற்குள் எட்டு பூகம்பங்கள்

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நான்கு மணி நேரத்திற்குள் எட்டு பூகம்பங்கள் ஏற்பட்டன.இதை தொடர்ந்து கிராம மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

Update: 2020-09-11 10:10 GMT
பால்கர்: 

மராட்டிய மாநிலம்  பால்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணி நேரத்திற்குள் 2.2 முதல் 3.6 ரிக்டர் அளவிலான மொத்தம் எட்டு குறைந்த தீவிர பூகம்பங்கள் ஏற்பட்டன. அதிகாரிகளின் கூற்றுப்படி, பால்கர் மாவட்டத்தின் தஹானு மற்றும் தலசாரி தஹ்சில்ஸில் இந்த நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இதுவரை எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை.

"அதிகாலை 3.29 மணிக்கு 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து முறையே 3.5 மற்றும் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  அதிகாலை 3.57 மற்றும் காலை 7.6 மணிக்கு ஏற்பட்டது. என்று மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத் தலைவர் விவேகானந்த் கதம் தெரிவித்தார்.

தஹானு துணை பிரதேச அலுவலர் ஆஷிமா மிட்டல் கூறும் போது

3.0 ரிக்டர் அளவுக்கு மேல் இருந்த மூன்று பூகம்பங்கள், மேலும் 5 அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை ஏற்பட்டன. அவற்றின் அளவு 2.2 முதல் 2.8 வரை இருந்தது.

இதற்கிடையில், உள்ளூர் தாசில்தார்கள் கிராமங்களை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறைந்த தீவிரம் கொண்ட பூகம்பங்கள் தஹானு மற்றும் தலசாரி தெஹ்ஸில்களைத் தாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமையின் இடைப்பட்ட இரவின் போது, ​​இதுபோன்ற நான்கு பூகம்பங்கள் உணரப்பட்டன. அவற்றில் ஒன்று 4.0 ரிக்டர் அளவு கொண்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்