மேற்கு வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு

மேற்கு வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-09-11 05:13 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இதற்கிடையில் வரும் 13 ஆம் தேதி(நாளை மறுநாள்) நீட் தேர்வு நடைபெற உள்ளதால் நாளை ஊரடங்கு தளர்வு அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி(நாளை) அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று நாளை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாக கூறியுள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்கு பயணம் செய்ய வசதியாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று மட்டும் மேற்கு வங்க மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்து கடைகள் உள்ளிட்ட அவசர தேவைகள் தவிர பிற கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்