கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2020-09-11 03:31 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதும் அன்றாடம் தலைப்புச்செய்தியாகி வரும் கொரோனாவின் கொடூர தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் தொடர்ந்து முடக்கி வருகிறது. அந்தவகையில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவும் இந்த கொடூர தொற்றுக்கு தொடர்ந்து இலக்காகி வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை அடிக்கடி உச்சம் தொடுகிறது.  

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 95 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 லட்சத்து 65 ஆயிரத்து 863 ஆக  உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையும் 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  ஆறுதல் அளிக்கும் விஷயமாக 34 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். 

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 29 நாட்களில் குணமடைவோர் விகிதம் முந்தைய விகிதத்தை விட 100 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்