அறிகுறி இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் - மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு

அறிகுறி இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-10 09:13 GMT
புதுடெல்லி,

உலகளவில் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான 2-வது நாடு என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் உலகளவில் கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையிலும் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது ஆறுதல் அளிக்கிற அம்சமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அறிகுறி இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  

 மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில்,

* ரேபிட் கிட் பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தாலும் சிலருக்கு அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.

* பாசிட்டிவ் நோயாளிகளை தவறவிடவில்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

* தவறான நெகட்டிவை கண்டறிந்து தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் சேர்க்க வலியுறுத்த வேண்டும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி அல்லது ஒரு குழுவை நியமித்து கண்டறிய வேண்டும்.

* ரேபிட் சோதனை விவரங்களை பகுப்பாய்வு செய்து, கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்