இறந்தவர் என தவறாக கருத்தப்பட்ட ஒருவர் திடீர் என எழுந்து சென்றார்

காசியாபாத்தில் ரோட்டோரம் இறந்தவர் என தவறாக கருத்தப்பட்ட ஒருவர் திடீர் என எழுந்து சென்றார்.;

Update: 2020-09-10 05:36 GMT
புதுடெல்லி

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் சாலை ஓரத்தில் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு ஒருவர் படுத்து கிடந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதி வழியாக சென்றவர்கள் அது  யாரோ ஒருவரின் உடல் எனக்கருதி போலீஸ் அதிகாரிகளுக்கும், ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி விட்டு காத்து இருந்தனர்.  போலீசாரும் அந்த பகுதிக்கு உடனடியாக வந்து சேர்ந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

எல்லோரும் பார்த்துக்கொண்டே இருக்க அந்த வெள்ளை துணியில் மூடி இருந்த நபர் எழுந்து சென்று விட்டார். பிறகுதான் அவர் அங்கு தூங்கி கொண்டு இருந்தார் என தெரியவந்தது.முழுவதுமாக வெள்ளைதுணியில் மூடி இருந்ததால் அது யாரோ ஒருவரின் சடலம் என கருதி உள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, டுவிட்டரில் 4,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 1,000 க்கும் மேற்பட்ட ரீ டுவீட்களையும் பெற்றது.

மேலும் செய்திகள்