இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவோர் விகிதம் 77.77 சதவீதம் - மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவோர் விகிதம் 77.77 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவோர் விகிதம் 77.77 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74,894 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை மொத்தம் 33,98,844 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைவோர் விகிதம் 77.77 சதவிகிதமாக இருக்கிறது.
மேலும் ஜூலை 3-வது வாரத்தில் 1,53,118 பேர் குணமடைந்த நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் 4,84,068 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,706 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்தம் எண்ணிக்கையில் 61 சதவிகிதத்தினர் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது இந்தியாவில் 8,97,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 2,40,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.