காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய 3 பேர் கைது
காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள பந்திப்போரா மாவட்டத்தில் ஹஜின் என்ற இடத்தில் உள்ள சந்தைப்பகுதியில் சிலர் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, பந்திப்போரா போலீசார் அந்த பகுதிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கையெறி குண்டு, துணி, கொடிகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.