நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

நிகோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-09-06 03:31 GMT
போர்ட்பிளேர்,

நிகோபார் தீவுகளில் இன்று காலை 6.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3  ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 7.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தவாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4-ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்