“குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச தனியார் துறை” - மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தனது நண்பர்களின் முன்னேற்றத்துக்காக இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி நாசமாக்குவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-09-05 19:47 GMT
புதுடெல்லி,

செலவின துறையின் அனுமதி இல்லாமல் இனி மத்திய அரசில் புதிய பதவிகள் எதுவும் உருவாக்கப்படாது என்று ஊடகத்தில் வெளியான செய்தியை இணைத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச தனியார் துறை என்ற சிந்தனையில் மோடி அரசு உள்ளது. அரசு அலுவலகங்களில் நிரந்தர ஊழியர்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே அரசின் எண்ணம். தனது நண்பர்களின் முன்னேற்றத்துக்காக இளைஞர்களின் எதிர்காலத்தை அவர் (மோடி) நாசமாக்குகிறார்” என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்