பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: வெளிநாட்டில் இருந்து மிரட்டல் மெயில் வந்தது கண்டுபிடிப்பு
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வந்துள்ள இமெயில் வெளிநாட்டிலிருந்து இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பில்கேல்ட்ஸ், எலன் முஸ்க் உள்ளிட்ட பிரபலமானவர்கள் சிலரின் டுவிட்டர் கணக்குகள் கடந்த ஜூலை மாதம் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. இது பிட்காயின் (கிரிப்டோகரன்சி) எனப்படும் கம்ப்யூட்டர் வழி பண பரிவர்த்தனை கும்பலின் (ஹேக்கர்ஸ்) கைவரிசை என கூறப்பட்டது.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் திடீரென்று முடக்கியதாகவும், பின்னர் அது மீட்கப்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார். ஹேக்கர்களின் பதிவுகள் நீக்கப்பட்டு, மோடியின் டுவிட்டர் கணக்கு சரி செய்யப்பட்டதாகவும் அதில் அவர் கூறி இருக்கிறார். பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை 25 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இமெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 8ம் தேதி, என்.ஐ.ஏ., இமெயில் முகவரிக்கு, பிரதமர் மோடி கொலை செய்யப்பட வேண்டும் என்ற வாசகங்களுடன் மெயில் ஒன்று வந்தது. இதனையடுத்து, பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என எஸ்.பி.ஜி., பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இமெயில் குறித்து விசாரிக்க 'ரா', உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், வெளிநாட்டிலிருந்து இந்த மிரட்டல் மெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இதேபோன்று பல்வேறு காலகட்டங்களில் அவருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. தற்போது வந்துள்ள மிரட்டல் இமெயில் முற்றிலும் போலி இமெயில் முகவரி என்று தெரிய வந்தாலும், உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.