6 மாதங்களில் முதல் முறையாக டீசல் விலை குறைப்பு

கடந்த 6 மாதங்களில் முதல் முறையாக டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-09-03 19:12 GMT
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மார்ச் மாத மத்தியில், டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு, கலால் வரி உயர்த்தப்பட்டதால், டீசல் விலை 82 நாட்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

ஜூன் 7-ந்தேதியில் இருந்து மீண்டும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அப்போதிருந்து ஜூலை 25-ந்தேதிக்குள் லிட்டருக்கு ரூ.12.55 உயர்த்தப்பட்டது. ஜூலை 25-ந்தேதிக்கு பிறகு டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. டெல்லியில் மட்டும் வாட் வரி குறைக்கப்பட்டதால், டீசல் விலை குறைந்தது.

இந்நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக நேற்று டீசல் விலை நாடு முழுவதும் குறைக்கப்பட்டது. சென்னையில், ரூ.78.86 ஆக இருந்த டீசல் விலை, ரூ.78.71 ஆக குறைந்தது. அதாவது, 15 காசுகள் குறைந்தது. டெல்லியில், 16 காசுகளும், மும்பையில் 17 காசுகளும், கொல்கத்தாவில் 16 காசுகளும் குறைந்தது.

பெட்ரோலை பொறுத்தவரை, ஜூன் 7-ந்தேதியில் இருந்து 29-ந்தேதிக்குள் லிட்டருக்கு ரூ.9.17 உயர்ந்தது. அதன்பிறகு மாற்றம் செய்யப்படாமல் இருந்த பெட்ரோல் விலை, கடந்த மாதம் 16-ந்தேதியில் இருந்து மீண்டும் உயர்த்தப்பட்டது. அப்போதிருந்து இதுவரை லிட்டருக்கு ரூ.1.51 விலை உயர்ந்தது.

நேற்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும் செய்திகள்