வாகனங்களில் தனியாக செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுமா? சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்

வாகனங்களில் தனியாக செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுமா ? என்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.;

Update: 2020-09-03 15:01 GMT
புதுடெல்லி,

சைக்கிள், கார், இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டுமா என்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகளை கழுவதல் ஆகியவற்றையே சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷான் இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் காரில், சைக்கிளில், டூவீலரில் தனியாகச் செல்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதிலில், 'யாரேனும் ஒருவர் காரில் தனியாகச் செல்லும்போதோ, சைக்கிள், இருசக்கர வாகனத்தில் தனியாகச் செல்லும்போதோ முகக்கவசம் அணிய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்படவில்லை” என்றார். 

மேலும் செய்திகள்