நாட்டில் கொரோனா சிகிச்சை பெறும் 62% பேர் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள்; மத்திய அரசு
நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோரில் 62% பேர் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் பற்றி மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் பேசும்பொழுது, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 29.7 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. இது சிகிச்சை பெறுவோரை விட 3.5 மடங்கு அதிகம்.
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 11 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று ஒரே நாளில் 68,584 பேர் என்ற இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலானோர் குணமடைந்து சென்றுள்ளனர். இதுவரை 4.5 கோடிக்கும் கூடுதலான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
நாட்டில் தமிழகம், உத்தர பிரதேசம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய 5 மாநிலங்கள் கொரோனா பாதிப்புகளுக்காக சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கையில் 62% கொண்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.