மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று
மத்தியப்பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போபால்,
சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலமாக நடத்த உள்ளதாகவும்,கொரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.