பாபர் மசூதி இடிப்பு வழக்கு: காணொலி காட்சி மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்த எல்.கே, அத்வானி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் காணொலி காட்சி மூலம் வாக்குமூலத்தை எல்.கே. அத்வானி பதிவு செய்தார்.

Update: 2020-07-24 07:48 GMT
லக்னோ: 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் அத்வானி ஆஜரானார். பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து காணொலி காட்சி வாயிலாக வாக்குமூலத்தை அத்வானி பதிவு செய்து வருகிறார்.  

பா. ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அத்வானியிடம் நீதிபதி எஸ்.கே.யாதவ் வாக்குமூலம் பெற்று வருகிறார். ஆக.31க்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின்  உத்தரவின்படி தினசரி விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்