ஆந்திர மாநிலத்தில் இன்று 7,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 7,998 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,998 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 72,711 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில் 1,391 பேருக்கும், குண்டூரில் 1,184 பேருக்கும், அனந்தபூரில் 1,016 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 61 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 37,555 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆந்திர மாநிலத்தில் 34,272 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.