ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை வெற்றி ; இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம், விரைவில் உற்பத்தி தொடங்குகிறது

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இந்தியா பங்குதாரர் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம்மிட்டு உள்ளது விரைவில் உற்பத்தி தொடங்குகிறது.

Update: 2020-07-21 00:58 GMT
புதுடெல்லி

 இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் பாதி பேருக்கு பரிசோதனையில் இருந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? என்பதும் ஆராயப்பட்டது.

இந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்களை மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட்டில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும். ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது.அஸ்த்ரா செனிகா, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்த ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே நடைபெற்று வரும் பெரிய அளவிலான கட்ட 3 சோதனைகளில், அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறும் போது

சோதனைகள் "நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளன, அதைப் பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

தற்போதைய நிலைமை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் சோதனைகள் தவிர, தென்னாப்பிரிக்காவில் 2,000 பேரும், பிரேசிலில் 5,000 பேரும் சோதனைகளில் பங்கேற்பார்கள்.

"நாங்கள் ஒரு வார காலத்திற்குள் இந்திய ஒழுங்குமுறைக்கு உரிம சோதனைகளுக்கு விண்ணப்பிப்போம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், இந்தியாவில் தடுப்பூசிக்கான சோதனைகளைத் தொடங்குவோம். கூடுதலாக, விரைவில் தடுப்பூசியை பெருமளவில் தயாரிக்கத் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்