ஜூலை 29-ந்தேதி இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் சேர்ப்பு
பிரான்சிடமிருந்து ரூ.58,000 கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
புதுடெல்லி, -
பிரான்சிடமிருந்து ரூ.58,000 கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் பேரில் தற்போது இந்தியாவிற்கு ரபேல் விமனாங்கள் வழங்கப்பட இருக்கிறது.
இதனிடையேபிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும், முன்னர் தீர்மானிக்கப்பட்ட நேரத்தின்படி இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் வழங்கப்படும் என்று அந்த நாட்டின் ராணுவ மந்திரி பிளோரன்ஸ் பார்லி கடந்த மாதம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் முதல் தொகுப்பாக 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்து சேரும் என இந்திய விமான படை தெரிவித்துள்ளது. வருகிற 29ந் தேதி அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.