கொரோனாவில் இருந்து மீண்ட அக்கா: வரவேற்கும் விதமாக ரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்ட தங்கை!

கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய அக்காவுக்கு, குத்தாட்டம் போட்டு தங்கை வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;

Update: 2020-07-20 17:11 GMT
புனே,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. கொரோனா பாதித்த மாநிலங்களில் மராட்டியத்தில் தான் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு மும்பைக்கு அடுத்து புனே அதிக பாதிப்புள்ள நகராக உள்ளது.

இந்தநிலையில் புனேவை சேர்ந்த சலோனி என்ற பெண்ணின் வீட்டில், அவரை தவிர அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தனது அக்கா குணமாகி வீடு திரும்ப, அவரை வரவேற்கும் விதமாக . ஹட் ஜா ரீ சோக்ரே பாடலுக்கு ரோட்டில் இறங்கி தங்கை குத்தாட்டம் போட்டு ஆடி, பாடி வரவேற்றுள்ளார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் அவர் பதிவிட அது வைரலாகி வருகிறது. 

கொரோனா நேரத்தில் எங்களுக்கு உதவ முன்வராத பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு செய்தி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்