மேற்கு வங்காளத்தில் சமூக பரவலானாதா கொரோனா? வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு
மேற்கு வங்காளத்தில் கொரோனா சமூக பரவலாவதனை முன்னிட்டு வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு இருக்கும் என மாநில உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநில உள்துறை செயலாளர் ஆலப்பன் பந்தோபாத்யா செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, இந்த வாரத்தில் இருந்து, ஒவ்வொரு வாரமும் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். நடப்பு வாரத்தில் வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களில் ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தும். இதுதவிர கட்டுப்படுத்தப்பட்ட மண்டல பகுதிகளிலும் ஊரடங்கு தொடரும். மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு இருக்கும் என கூறினார்.
கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. அது சமூகத்தில் பரவி வருகிறது என்றே கருதப்படுகிறது. சில குழுக்களில் கொரோனா பரவி பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், இதுபற்றி விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.