ஒரு வருடத்திற்குள் தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும்: பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியாங்கா காந்தி வட்டாரம் தகவல்

ஒரு வருடத்திற்குள் தன்னை முதல் மந்திரியாக அறிவிக்க வேண்டும் என சச்சின் பைலட் கோரிக்கை வைத்து இருந்தார் என பிரியாங்கா காந்தி நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Update: 2020-07-18 00:49 GMT

புதுடெல்லி: 

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவியும், அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு உள்ளார். அவர் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறுகிறார்.

சச்சின் பைலட்டின் துணையுடன் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாரதீய ஜனதா முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டி உள்ள காங்கிரஸ் கட்சி அசோக் கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கவைத்து இருக்கிறது. சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.கள் அரியானா மாநிலம் மனேசரில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாதேராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:- 

சச்சின் பைலட் ஒரு வருடத்திற்குள் தான் ராஜஸ்தான் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்று பலமுறை கேட்டுக் கொண்டார். அவர்கள் சச்சினின் கோரிக்கையை ஏற்கத் தயாராக இல்லை என்பதால்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க சச்சின் மறுத்துவிட்டார்.

சச்சின் பைலட் தான் முதல்வராவார் என்று பகிரங்கமாக அறிவிக்க விரும்புவதாகவும், வாக்குறுதியளிக்க முடியாவிட்டால் காந்திகளுடன் சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் கூறினார்.

பிரியங்காவுடன் 3 மணி நேரம் பைலட்டின் போனில் உரையாடி உள்ளார் அதன் பிறகுதான் அவரது பதவி பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பைலட் கோரிக்கை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரே, பைலட்டை ராஜஸ்தான் துணை முதல்வராகவும், அதன் மாநில பிரிவின் தலைவராகவும் நீக்க கட்சி முடிவு செய்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

"காங்கிரஸ் எனக்கு எதிராக செயல்படும்போது சமரசம் பற்றி எவ்வாறு பேச முடியும்?" "காங்கிரஸ் உத்தரவாதங்களை இனி நம்ப முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை" 

"ஒருபுறம், காங்கிரஸ் 'கதவுகள் திறக்கப்பட்டுள்ளது' என்று பேசுகிறது, மறுபுறம் நான் பதவி நீக்கம் செய்யப்பட்டு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பபட்டு உள்ளது. நான் அசோக் கெலாட் என்பவரால் தாக்கப்படுகிறேன் என்று பைலட் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்