ராஜ்யசபாவின் புதிய எம்.பி.க்கள் வரும் 22ந்தேதி பதவி பிரமாணம் ஏற்பு

ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள் வரும் 22ந்தேதி பதவி பிரமாணம் ஏற்று கொள்கின்றனர்.

Update: 2020-07-17 11:24 GMT
புதுடெல்லி,

ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்கள் அனைவரும் வருகிற 22ந்தேதி ஹவுஸ் ஆப் சேம்பரில் பதவி பிரமாணம் ஏற்று கொள்கின்றனர்.  நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்பொழுது அவையிலும் அல்லது கூட்டம் நடைபெறாத நாட்களில், ராஜ்யசபாவின் தலைவர் அறையிலும் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்து கொள்வது வழக்கம்.  

ஆனால், இந்த முறை நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி விதிகளை பின்பற்றும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் 19ந்தேதி ஆந்திர பிரதேசம் 4, குஜராத் 4, ஜார்க்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 ஆகிய இடங்களுக்கு ராஜ்யசபை தேர்தல் நடந்தது.  இதில் வெற்றி பெற்றவர்கள் உள்பட 20 மாநிலங்களை சேர்ந்த 61 எம்.பி.க்களின் பதவி பிரமாணம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்