ஆன்லைன் கல்வி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.;

Update: 2020-07-14 13:34 GMT
புதுடெல்லி,

கொரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக  பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இதன் விவரங்களை கீழ் காணலாம்.

* எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்பு நடத்தக் கூடாது
* 1 - 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ஒவ்வொரு பாடமும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் வகுப்பு எடுக்க வேண்டும்
* 9- 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 முறை பாடம் நடத்தலாம்

மேலும் செய்திகள்