பயணிகள் வாகன விற்பனை ஜூன் மாதத்தில் 50% வீழ்ச்சி

பயணிகள் வாகன விற்பனை ஜூன் மாதத்தில் 50 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Update: 2020-07-14 10:37 GMT
புதுடெல்லி,

பயணிகள் வாகன விற்பனை நிகழாண்டு ஜூன் மாதம் 49.59 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன உற்பத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2,09,522  வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு ஜூனில் 1,05,617 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது.

அதே போன்று பல்வகை பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 31.16 சதவிகிதமும், வேன்களின் விற்பனை 62.06 சதவிகிதமும் குறைந்து விட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது, கடந்த மாதம் இரு சக்கர வாகன விற்பனை 39 சதவிகிதம் குறைந்துள்ளது.  கடந்தமாதம் பயணியர் கார் ஏற்றுமதியும் 56.31 சதவிகித சரிவை சந்தித்துள்ளது என்று உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு முடக்கம், பொருளாதார பிரச்சினை ஆகியவற்றால் வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்