இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதில் இருந்து இன்று 111-வது நாள் ஆகும். இந்தியாவில் இதுவரை 8,78,254 வழக்குகள் பதிவாகியுள்ளன. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 பேர் ஆகும். மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இருப்பினும், மீட்பு விகிதம் உயர்ந்து இப்போது 63.02 சதவீதமாக உள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,53,470 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உள்ளது. தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் 19 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் கூடுதலாகவே உள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் 64.66 சதவிகிதத்துடன் 18-வது இடத்தில் உள்ளது.
இன்றைய தேதியில் 3,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,51,861 கூடுதலாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,19,103 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,18,06,256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.