மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்தது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது.
மும்பை,
நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன. தற்போது மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று அதிக அளவாக மேலும் 8,139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,600 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல மராட்டியத்தில் இன்று 223 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 4,360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,985 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 99,202 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.