சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் முக்கிய பாடங்களை நீக்கக்கூடாது - மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் முக்கிய பாடங்களை நீக்கக்கூடாது என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-07-08 22:00 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறைப்பு என்ற பெயரில், குடியுரிமை, மதச்சார்பின்மை, பிரிவினை, கூட்டாட்சி உள்ளிட்டவை தொடர்பான பாடங்களை மத்திய அரசு நீக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த சந்தர்ப்பத்திலும், முக்கியமான பாடங்களை நீக்க வேண்டாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்