நிராயுதபாணிகளாக இருந்த இந்திய வீரர்கள் கொலையை சீனா நியாயப்படுத்துவது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

நிராயுதபாணிகளாக இருந்த இந்திய வீரர்கள் கொலையை சீனா நியாயப்படுத்துவது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2020-07-07 20:53 GMT
புதுடெல்லி,

லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கிய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேசநலன் முக்கியமானது. அதை பாதுகாப்பது இந்திய அரசின் கடமை.

அதே சமயம், எனக்குள் 3 கேள்விகள் எழுகின்றன. 1. எல்லையில் முன்பு இருந்த நிலைமை வலியுறுத்தப்படாதது ஏன்? 2. நமது பகுதியில் 20 நிராயுதபாணி இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன்? 3. கல்வான் பள்ளத்தாக்கின் பிராந்திய இறையாண்மை பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்